அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - கவனம் குறைந்ததால் மரணம் - ஜனாசா நல்லடக்கம்


பெருநாள் என்பது பலருக்கு மகிழ்ச்சியே. ஆனால் அன்றைய தினம் சிலர் சொல்லொனாத் துயரத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். கடந்த 31.08.2011 அன்று 45 வயது மதிக்கதக்க  ஒருவர் ரியாத்தில் இருந்து அல்கர்ஜ் செல்லும் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதால் இறந்து விட்டார்.  இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 முதலாளியின் உத்தரவு
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் சகோ. மெகபூப் ஜான். இவருக்கு ஒரு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். குடும்பத்தினரை காப்பாற்ற, இவர் ரியாதில் தங்கி பணி புரிந்து வந்தார். பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட எண்ணி தனது நண்பர்கள் ரூமிற்கு சென்று இருந்தார். இரவு 10 மணிக்கு தனது கம்பெனி நிர்வாகியிடம் இருந்து போன் கால் வந்தது. முக்கியவேலை உள்ளது உடன் வா என்று சொல்லியிருக்கிறார். இதை நண்பர்களிடம் கூறவும் காலையில் போகலாம் படு என்றனர். ஆனால் படுத்து உறங்க மெகபூபுக்கு மனம் இடம் அளிக்கவில்லை. உயிர் பறிபோகப் போகிறது என்ற எண்ணம் இன்றி முதலாளியின் உத்தரவை மதித்து புறப்பட்டார். 
கவனக்குறைவு உயிரை பறித்தது!
ரியாத்தில் இருந்து சுமார் 100 கிமீ அல்கர்ஜ் என்கிற ஊர் உள்ளது. அவ்வூர் செல்லலும் சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் போய்க்கொண்டிருக்கும். சாலை விதிப்படி 120 கிமீ வேகம் போகலாம். ஆனால் போகும் வாகனங்களோ 160 முதல் 180 வரைச் செல்லும். மகபூப்பும் பெரிய வண்டி ஓட்டக் கூடிய ஓட்டுனரே. வலதுபுறத்தில் இருந்து இடதுபுற சாலையை கடக்கும் போது இரவு ஒரு மணியளவில் அத்துயரம் நடந்தேறியது. கண் இமைக்கும் நேரத்தில் விபத்தில் மாண்டு போனார்.

நான்கு நாள் முடிந்தே இறந்த விபரம் தெரியும்
மகபூப்பை காணவில்லை, போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இரவு நேரத்தில் போனதால் போலீஸ் பிடித்து சென்று இருப்பார்கள் என்று நண்பர்கள் நினத்துக் கொண்டார்கள். ரியாதில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தேடினார்கள். பிறகு முதலாளி சொல்லவும்  மருத்துவமனைக்கு சென்று பார்க்கும் போதுதான் தெரிந்தது மரணம் அடைந்த செய்தி.

TNTJ மாநிலத்திடம் கோரிக்கை
கடந்த 04.09.2011 அன்று செய்தி தெரிந்ததும், மஹபூப் ஜானுடைய குடும்பத்தினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையை தொடர்பு கொண்டு உதவும்படி கோரிக்கை வைத்தனர். மாநிலத் தலைமை உடன் ரியாத் மண்டலத்திடம் தொடர்பு கொள்ள, உடனடியாக ரியாத் மண்டல நிர்வாகி சகோ. அரசூர் ஃபாரூக் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

நல்லடக்கம்
கடந்த 06.09.2011 அன்று சவூதி அரசாங்கத்திற்கும், இந்திய தூதரகத்திற்கும் தேவையான ஆவணங்கள் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளிடமிருந்து இந்தியாவிலிருந்து பெறப்பட்டு, 7 ஆம் தேதி மகபூப்பின் நண்பர் ஹாஜிதீனுடன் சென்று அனைத்து வேலைகளும் ரியாத் மண்டலத்தால் முடித்துக் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். அதன்பிறகு அவர்கள் செய்த தாமதத்தினால், ஒரு சில நாட்கள் கழித்து, 10.09.2011 அன்று  ரியாத்தில் உள்ள உம்முல் ஹம்மாம் மையவாடியில் இஷாவுக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.