ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா ஃபார்கோ கிளைக்கூட்டம் கடந்த 19.10.2011 புதனன்று ஃபார்கோ கேம்ப் பள்ளியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. கமால் தலைமையிலும், மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத், நியூ செனையா கிளை தலைவர் சகோ. நூர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டலப் பேச்சாளர் சகோ. பஷீர் மவுலவி அவர்கள் “இஸ்லாமிய பார்வையில் தன்னிறைவு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனை அடுத்து மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், ரியாத் ஒலைய்யா கிளையின் தொடர் மொபைல் இரத்த தான முகாம், செயல்பாடுகள் வழிமுறைகளை விவரித்தார். கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இறுதியாக சகோ. ஃபரீத் அவர்கள் ஏகத்துவம், தீன்குலப்பெண்மணி, உணர்வு சந்தா குறித்தும், அதன் அவசியம் மற்றும் குர்பானி குறித்தும் விளக்கம் அளித்தார். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபார்கோ கிளை
கிளை நிகழ்ச்சி
"இஸ்லாமிய பார்வையில் தன்னிறைவு" – ரியாத் நியூ செனைய்யா ஃபார்கோ கிளைக்கூட்டம் 19-10-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment