அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாதில் ஹஜ் சிறப்பு இரத்த தான முகாமிற்கான செயல்வீரர்கள் கூட்டம் 14-10-2011


ரியாத் டி.என்.டி.ஜேயின் தலைமை அலுவலகத்தில் 14.10.2011 அன்று செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

எதிர்வரும் 21.10.2011 அன்று ரியாத் டி.என்.டி.ஜே நடத்த உள்ள ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்கான மாபெரும் இரத்ததானம் பற்றி அதில் விவாதிக்கப்பட்டது.  மண்டலத் தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், மருத்துவ அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், முகாமிற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது ரியாத் TNTJ நடத்தும் 13 ஆவது இரத்த தான முகாம் ஆகும். உலக நாடுகளில் இருந்து ஹஜ் செய்ய வரும் ஹாஜிகளுக்கு உதவுவதற்கான 5 ஆவது சிறப்பு முகாம் ஆகும்.

தொண்டரணி பங்களிப்புகள், வாகன ஏற்பாடுகள், கொடையாளிகளுக்கான உணவு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பெயர் பதிவு, கொடையாளிகளுக்கு இமெயில்-SMS மூலம் அழைப்பு, நோட்டீஸ் விளம்பரங்கள், இன்டர்நெட், டிவி மற்றும் இதழ்களில் விளம்பரம் முதலான ஏற்பாடுகளை துரிதப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.