அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - ஜரீர் கிளையில் பயான் நிகழ்ச்சி 03.10.2011

டந்த 03.10.2011 அன்று இரவு இஷாவிற்கு பிறகு ரியாத் மண்டல கிளைகளில் ஒன்றான ஜரீர் கிளையின் மாதாந்திரக் கூட்டம் மற்றும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் தலைமையிலும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்டலப் பேச்சாளர் மவுலவி ஹாபிழ் ஸலபி அவர்கள் ”சிந்திக்கத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார், அதைத் தொடர்ந்து சகோதரர்களின் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு விடையளித்தார்.

கிளைத்தலைவர் சகோ. அலாவுதீன் அவர்கள் கிளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றி கூறிய பிறகு, மண்டல துணைச் செயலாளர் ஹாஜா மைதீன், தலைமைச் செய்திகளையும் ரியாத் மண்டலம் நடத்த இருக்கும் 13 வது இரத்த தான முகாம் பற்றிய தகவலுடன் இரத்த தானம் ஏன் செய்ய வேண்டும் என்ற தகவலையும் விரிவாக எடுத்துக் கூறினார். இக்கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.