ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையில் 21-02-2012 செவ்வாய் அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை சித்தின் கிளைத் தலைவர் செய்யது அலி அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மருத்துவ அணி செயலாளரும், மண்டல பேச்சாளருமான சகோ. முஹம்மது மாஹீன், தொழுவோம் வாருங்கள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதில் தொழுகையின் சிறப்புகள், தொழுகையை விடுவதனால் ஏற்படும் தீங்குகள் மற்றும் தண்டனைகள், ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார். பின்னர் சகோ. அப்பாஸ் அவர்கள், கிளை செய்திகளையும் உம்ரா பயண செய்திகளையும் எடுத்து கூறினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
சித்தீன் கிளை
"தொழுவோம் வாருங்கள்" - சித்தீன் கிளையில் மார்க்க சொற்பொழிவு 21-02-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment