அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான ஃபிப்ரவரி 2012

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் கடந்த 10.02.2012  வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.
தஞ்சை / திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு TNTJ கிளைகளில், கல்லூரி ஆலிமாக்கள் பயான் நிகழ்ச்சிகள் மற்றும் தர்பியாக்களில் பங்கேற்ற தகவல்கள்  பதியப்பட்டன.  கல்லூரியில் நடைபெறும் பேச்சுப் பயிற்சி குறித்த தகவல் பதியப்பட்டது. கல்லூரி வளர்ச்சிக்கான ஆலோசனைகள் மற்றும் மாணவிகளுக்கான சட்ட திட்டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. கல்லூரிக்காக வாங்கப்பட்ட உபகரணங்கள் குறித்து பேசப்பட்டது. தணிக்கை  செய்யப்பட்ட  கணக்குகள்  விவரிக்கப்பட்டன. கல்லூரி செயலாளர் சகோ,. சுவாமிமலை ஜாஃபர் அவர்கள் தொலைபேசி மூலம் கல்லூரி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதிக அளவில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.