தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான
கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப்
பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான,
அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள்
கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திர கூட்டம் கடந்த 13.01.2012 வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில்
நடைபெற்றது.
தஞ்சை / திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு TNTJ கிளைகளில்,
கல்லூரி ஆலிமாக்கள் பயான் நிகழ்ச்சிகள் & தர்பியாக்களில் பங்கேற்ற தகவல்கள்
பதியப்பட்டன. கல்லூரியில் நடைபெறும் பேச்சுப் பயிற்சி குறித்த தகவல் பதியப்பட்டது.
கல்லூரி வளர்ச்சிக்கான ஆலோசனைகள் & மாணவிகளுக்கான சட்ட திட்டங்கள்
கலந்தாலோசிக்கப்பட்டன. தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் விவரிக்கப்பட்டன. அதிக
அளவில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப்
தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment