தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக
தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த 26.01.2012
வியாழன் அன்று இரவு கதீம் செனைய்யா பகுதியில்
நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல தஃவா
செயலாளர் சகோ. ஹாஜா, தொண்டர் அணிச் செயலாளர் சகோ. நூர், மருத்துவ அணி
செயலாளர் சகோ மாஹீன் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மண்டல தலைவர்
சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “ஒளு செய்முறை விளக்கம்” குறித்த தர்பியாவை
நடத்தினார். ஒளு, தயம்மும், கடமையான குளிப்பு, ஒளு முறிதல், மஸஹ் செய்தல், தண்ணீர்
பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. மேலும், ஒளு குறித்த அனைத்து
கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மண்டல மாநில செயல்பாடுகளை சகோ. மாஹீன் விளக்கினார். தர்பியாவிலிருந்து கேள்விகள்
கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏராளமானோர்
கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் இரவு சிறப்பு உணவு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment