அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் ஷிஃபா கிளையில் ஆன்லைன் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 06-01-2012

ரியாத் மண்டலத்தின் பெரிய கிளைகளுள் ஒன்றான ஷிஃபா கிளையின் ஏற்பாட்டில், ஷிஃபா செனைய்யா பகுதியில், கடந்த 06.01.2012 வெள்ளியன்று மதியம் ஆன்லைன் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், கிளைத் தலைவர் சகோ. ஜியாவுதீன், மண்டல சமூகப்பணி ஒருங்கிணைப்பாளர் சகோ. மூமீன் குத்தூஸ், மண்டல தஃவா அணி செயலாளர் சகோ. கதிரை ஹாஜா  மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் சகோ. ரஹ்மதுல்லாஹ் அவர்கள் ஆன்லைன் மூலம் மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கு விரிவாகவும், விளக்கமாகவும் பதிலளித்தார்.  நிகழ்ச்சி ஆன்லைன்பிஜெவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், பிப் 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு குறித்தும் சகோ. ரஹ்மதுல்லாஹ் விளக்கமளித்தார். சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் ரியாத் மண்டலம் 20.01.2012 அன்று நடத்த உள்ள 16 ஆவது இரத்த தான முகாம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.