அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டலம் அஜீசியா கிளையில் உடற்பயிற்சி தர்பியா முகாம்

ரியாத் மண்டலத்தின் அஜீஸியா கிளை சார்பாக அல்ராஜி கேம்பில் கடந்த 30-11-2012 வெள்ளியன்று உடற்பயிற்சி தர்பியா முகாம் நடத்தப்பட்டது. ஜூமுஆ தொழுகைக்கு பின் சகோ.ஓட்டை இஸ்மாயில் மற்றும் சகோ.நைனா முஹம்மது அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமை, மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.அப்துல் (ஷாகுல்) ஹமீது அவர்கள் அறிமுகவுரையாற்றி துவக்கி வைத்தார். பின்னர் பயிற்சியாளர் சகோ.ரய்யான் அவர்கள் உடற்பயிற்சி வகுப்பை நடத்தினார். அவரது பயிற்சியை கண்ட பார்வையாளர்கள் ஆர்வமுடன் அதைப்போன்று செய்து பயிற்சி எடுத்தனர்.

பின்னர் மண்டலம் சார்பாக மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், இஸ்லாமும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். மதிய உணவுடன் கூட்டம் நிறைவுற்றது.

முன்னதாக அஜீஸியா கிளை சார்பாக இந்த வாரம் முழுவதும் தவ்ஹீத் மாப்பிள்ளை மற்றும் புகை பிடித்தல் ஒரு பாதக செயல் என்ற நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. அத்துடன் சகோ.பீ.ஜே அவர்கள் எழுதிய வருமுன் உரைத்த இஸ்லாம் உட்பட பல்வேறு மொழியிலான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.