ரியாத் மண்டலத்தின் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி, கடந்த 30.11.2012 வெள்ளியன்று இரவு பத்தாஹ்விலுள்ள ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ.யூனுஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
முதலில், ரியாத் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள், “இஸ்லாம் ஓர் அருட்கொடை” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனை அடுத்து சகோ.முஹம்மது யூனுஸ் அவர்கள், “இறைவன் மீது நம்பிக்கை வைப்போம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மண்டல பேச்சாளர் சகோ.அன்சாரி அவர்கள் “அவதூறுகளை தவிர்ப்போம்” என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் மண்டல-மாநில செய்திகளை விவரித்தார். அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment