தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தில், தஃவா பணிகள் முன்பை விட அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. கிளை இல்லாத இடங்களில் கிளைகள் அமைத்து செயல்படுதல், இதுவரை செல்லாத புதிய பகுதிகளுக்கு சென்று அழைப்புப் பணி செய்தல் போன்றவை வீரியத்துடன் செயலாக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ரியாதிலிருந்து தம்மாம் செல்லும் வழியில் துமாமாவுக்கு முன்னதாக இருக்கும் சவூதி கேட்டரிங் கேம்பில் மார்க்கத்தை எடுத்து சொல்லும் பொருட்டு பயான் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
கடந்த 27-11-12 அன்று இரவு 8.00 மணிக்கு சவூதி கேட்டரிங் கேம்ப் சகோதரர்களான ஜமால் மற்றும் ஆஹாகான் ஆகியோரின் ஏற்பாட்டில் பயான் நிகழ்ச்சி ஆரம்பமானது. ரியாத் மண்டல பேச்சாளர் மௌலவி. செய்யதலி ஃபைஜி அவர்கள், ‘இஸ்லாத்தை முழுமையாக அறிவோம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் அரும் பணிகள் பற்றி மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன் எடுத்துரைத்தார்.
ஆர்வமுடன் கலந்து கொண்ட இலங்கை மற்றும் தமிழக சகோதரர்கள் தொடர்ந்து பயான் நிகழ்ச்சியை நடத்துமாறும் தொழுகை பயிற்சி செய்யுமாறும் வேண்டுகோள் வைத்தனர். மண்டல அறிவுறுத்தலின் படி வரும் காலங்களில் அதை செய்வதாக நிர்வாகிகள் கூறினர். வருகை தந்த சகோதரர்களிடமும், வராத சகோதரர்களிடம் விநியோகிக்கவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்த ‘யார் இவர்?’ என்ற பிரசுரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment