தமிழகத்தைச் சேர்ந்தவர் சகோ. ஷேக் தாவூத். கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதனால், ரியாதில் உள்ள சுமேசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து வேலை செய்ய உடல் நிலை அனுமதிக்காத காரணத்தால், ரியாதிலிருந்து சுமார் 650 கிமீ தொலைவிலுள்ள ரஃபா என்ற நகரில் உள்ள அவரது கஃபீலை சந்தித்து, அவர் தாயகம் செல்வதற்கான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டு, ஃபைனல் எக்ஸிட் அடித்து, கடந்த 27.11.2012 அன்று மாலை விமான நிலையம் வரை சென்று அவர் குவைத் ஏர்லைன்ஸ் மூலம் தாயகம் செல்ல உதவிகள் செய்யப்பட்டன. முன்னதாக நியூ செனைய்யா கிளை சார்பாக, மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள், கடந்த 13.11.2012 அன்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த சுமைசி மருத்துவமனையில் சென்று சந்தித்து, அவரை தாயகம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக வாக்களித்து இருந்தார். கேரளாவைச் சேர்ந்த சகோ. சுக்கூர் மேற்கண்ட விஷயங்களுக்கு உதவி புரிந்தார்.
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது
விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கப்படுகிறது
No comments:
Post a Comment