அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - நியூ செனைய்யா கிளையில் வாகன தஃவா & புத்தகங்கள் விநியோகம்

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் தொடர் தஃவா பணியின் ஓர் அங்கமாக, நியூ செனைய்யாவில் தமிழ், உருது மற்றும் வங்காள மொழி பேசும் மக்கள் வசிக்கும் கேம்புகளிலும், மார்க்கெட் பகுதிகளிலும் புத்தகங்கள் கொடுத்து அழைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, கிளைச் செயலாளர் சகோ. கமால் அவர்களின் சீரிய முயற்சியில், அல்வஃப்ரா கேம்ப், பெங்காளி மார்க்கெட் பகுதிகளில் கடந்த 19 மற்றும் 21 ஆம் தேதிகளில் சகோ. பி.ஜெ. எழுதிய வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகங்கள், மேலும் "நபிமொழிகள் 50" புத்தகங்கள் உட்பட உருது, வங்காளம், ஆங்கிலம் மற்றும் நேபாள மொழிகளில் மார்க்க விளக்க புத்தகங்கள் சைக்கிள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு நடமாடும் புத்தக விநியோக முறையில் அதிக அளவில் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மேலும், வேலைக்கு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வாகனங்களில் செல்லக்கூடிய நேரங்களிலும், பயனுள்ள வகையில் பயண நேரத்தை கழிக்கும் முகமாக, "இறை திருப்திக்காக செயல்படுவோம்" என்ற தலைப்பில் குழு தஃவா செய்யப்பட்டது. கடந்த 21.12.2012 அன்று மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் நியூ செனைய்யா கிளை சார்பாக இந்நிகழ்ச்சியை நடத்தினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.