கடந்த 14.12.2012 வெள்ளியன்று மதியம், ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையில் “ஜனாஸா தொழுகை விளக்கம்” தர்பியா நிகழ்ச்சியும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மண்டல அணிச் செயலாளர் சகோ. மோமீன் தலைமையிலும், கிளைத் தலைவர் சகோ. ஜஹாங்கீர் பாஷா மற்றும் மண்டல அணிச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. சிட்டி பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி மவுலவி அவர்கள், “ஜனாஸா தொழுகை விளக்கம்” குறித்து தர்பியா நிகழ்ச்சி நடத்தினார். முன்னதாக, சகோ. மோமீன் துவக்க உரை ஆற்றினார்.
கிளை மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது. அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
ஷிஃபா செனைய்யா பகுதியில் “இஸ்லாத்தில் மனித நேயம்” மற்றும் “ஸஃபர் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்” என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழறிந்த சகோதரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
மேலும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மூடநம்பிக்கைகளும் முஸ்லிம்களின் நிலையும் முதலான தலைப்புகளில் டிவிடிக்களும் விநியோகம் செய்யப்பட்டன.
No comments:
Post a Comment