கடந்த 27.11.2012 செவ்வாய் அன்று இரவு, ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜரீர் பகுதியில் உள்ள பள்ளிவாயிலில் நடைபெற்றது. மண்டல வர்த்தக அணி செயலாளர் சகோ.முஹம்மது அக்பர் தலைமையில், தொண்டரணி செயலாளர் சகோ.நூர் முஹம்மது முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கிளைத் தலைவர் சகோ.ஏனங்குடி அலாவுதீன் சிற்றுரை நிகழ்த்தி கூட்டத்தை துவக்கி வைத்தார். மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத், "தியாகத்தில் வளர்ந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு "ஏகத்துவமும் இணைவைப்பும்" என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
நாகர்கோவிலில் நாளை நடைபெற உள்ள கிறித்துவர்களுடானான விவாதம், 2013 க்கான தஃவா காலண்டர் மற்றும் மண்டல - மாநில செய்திகளை சகோ. முஹம்மது அக்பர் விளக்கினார். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment