அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் நியூ செனைய்யாவில் உடற்பயிற்சி தர்பியா முகாம்

ளைகுடாவில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் வேலை, சாப்பாடு, தூக்கம் என்று நாட்களை கழிப்பதால் எந்தவிதமான உடற்பயிற்சியும் இன்றி உடல் பருத்து விடுவதுடன் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி விடுகின்றனர். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பொருட்டு ரியாத் மண்டலம் சார்பாக ரியாதின் பல்வேறு பகுதிகளில் உடற்பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. உடலாரோக்கியத்தை பேணுவது மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 28-11-2012 புதன் அன்று நியூ செனைய்யா கிளை சார்பாக, ஃபார்கோ வில்லா கேம்பில் உடற்பயிற்சி தர்பியா முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. கிளை நிர்வாகிகள் சகோ.கமால், சகோ.நிஜாமுதீன் ஆகியோரின் ஏற்பாட்டில், மண்டல துணைச் செயலாளர் சகோ.அரசூர் ஃபாரூக் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் ஸ்ட்ராங் ஜிம் முதன்மை பயிற்சியாளர் சகோ. துலா நவாஸ் அவர்கள் பயிற்சியளித்தார்.

நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் செய்ய வேண்டிய பயிற்சி முறைகளை அவர் செய்து காட்ட பார்வையாளர்கள் அதை செய்து பார்த்து கற்றுக் கொண்டனர். பின்னர் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகளின் பட்டியலும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. தமிழில் சொல்லப்பட்ட பயிற்சி முறைகளை பிற மொழி பேசுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மண்டல செயலாளர் சகோ.அப்துல் ரஹ்மான் நவ்லக் அவர்கள் ஹிந்தி   / உருது மற்றும் அரபி மொழியில் மொழி பெயர்த்து கூறினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பயிற்சி வகுப்பில் தமிழ் சகோதரர்கள் மட்டுமின்றி பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், சூடான், ஏமன், எத்தியோப்பியா, எகிப்து போன்ற நாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.