அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

விடுமுறை நாளில் ரியாத் நியூ செனைய்யா பகுதியில் நடமாடும் நூலகம் – புத்தகங்கள் விநியோகம்

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த மாதம் முழுவதும் நாயகம் நபி(ஸல்) அவர்களை பற்றிய பிரச்சாரத்தையும், இஸ்லாத்தினைப் பற்றிய விளக்கங்களையும் வேற்று மொழிகள் பேசும் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத மக்களிடம் ரியாத் மண்டலம் அதிகப்படுத்தி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக நியூ செனைய்யா பகுதியில் குழு தஃவா என்ற அடிப்படையில் கடந்த விடுமுறை நாளான 30.11.2012 வெள்ளியன்று நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் புத்தகங்களின் அட்டைப்பெட்டிகள், பைகளை வைத்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களிடம் யார் இவர்? என்ற நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. ஜூமுஆ மற்றும் இதர தொழுகையில் கூடும் மக்களுக்கும், கேம்புகளிலும் சென்று வருமுன் உரைத்த இஸ்லாம், நபிமொழிகள் 50, மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட உருது, வங்காளம், நேபாளம், தக்கோலோ மொழியிலான புத்தகங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

கிளைச் செயலாளர் சகோ.கமாலுதீன் மற்றும் நிர்வாகிகள் / உறுப்பினர்களின் களப்பணியில் ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 585 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.