கடந்த 12.12.2012 புதன்கிழமை அன்று ரியாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளை மாதாந்திரக் கூட்டம் ஒலையா பகுதியில் அமைந்துள்ள அல்கொஸாமா & ஃபைசலியா வில்லாவில் உள்ள பள்ளியில் இஷாவுக்குப் பின் நடைபெற்றது.
கிளைச் செயலாளர் அய்யூப் கூட்டத்தை துவக்கி வைக்க, மண்டலப் பொருளாளர் சகோ.ஃபரீத் “நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் நூருல் அமீன் மண்டல மாநிலச் செய்திகளை எடுத்துரைத்தார்.
கிளை மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
மேலும் “இஸ்லாத்தில் மனித நேயம்” என்ற தலைப்பிலான நோட்டீஸ் அப்பகுதியில் வசிக்கும் தமிழறிந்த சகோதரர்களுக்கு கிளைச் செயலாளர் அய்யூப் அவர்கள் மூலம் 12.12.2012 & 14.12.2012 ஆகிய தேதிகளில் வினியோகம் செய்யப்பட்டது.
மேலும் ஒலைய்யா கிளை சார்பாக சகோ.அய்யூப் அவர்களின் முயற்சியில் "வருமுன் உரைத்த இஸ்லாம்", "இயேசு இறை மகனா?", "நபிமொழிகள் 50" மற்றும் "PROPHET MOHAMMAD THE GREATEST MAN" உட்பட பல்வேறு மொழிகளிலான புத்தகங்கள், தமிழக, இலங்கை சகோதரர்களிடம், அல்கொஸாமா வில்லாவிலும், ஒலைய்யாவின் இதர பகுதிகளிலும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில், 10, 12, 13 & 14 தேதிகளில் பரவலாக அதிக அளவில் விநியோகிக்கப்பட்டு அழைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment