அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

திருமங்கலக்குடி சகோதரரின் ஜனாஸா ரியாதில் நல்லடக்கம்

ரியாதின் ரவ்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணி புரிந்து வந்த தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடியைச் சேர்ந்த சகோதரர் சவ்கத் அலி, வயது 37.  கடந்த 09.12.2012 அன்று அவர் வசித்து வந்த அறையில் இரவில் இறந்து விட்டார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

இதை அறிந்த நிறுவன நிர்வாகம், மரணித்தவரின் சகோதரர் ஜியாவுதீன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தது. உடனடியாக மண்டல நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் மூலம், இறந்த சகோதரரின் உறவினர்களுடன் இணைந்து, நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஆவணங்களும் முறையாக பெறப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டன. சிறுவயதில் திடீரெனெ இறந்ததால், இறப்பு சான்றிதழ் பெற சற்று தாமதமானது,

கடந்த 19.12.2012 புதன் அன்று அஸருக்கு பிறகு அல்ராஜி பள்ளியில் தொழுகை நடத்தி நஸீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் நமது கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டு துவா செய்தார்கள்.



களப்பணி & தவவல்: அரசூர் ஃபாரூக், ரியாதிலிருந்து....

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.