அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

‘இஸ்லாம் கூறும் ஒற்றுமை’ ரியாத் அஜீஸியா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி 18-11-2011

ஜீஸியா கிளையில் கடந்த 18-11-2011 வெள்ளிக்கிழமையன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஜும்மாவுக்கு பின் நடைபெற்றது. கிளை பொறுப்பாளர்களில் ஒருவரான சகோ. கனி அவர்கள், இக்கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அடுத்ததாக சகோ. முஹம்மது மாஹீன் ‘இஸ்லாம் கூறும் ஒற்றுமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். ‘வேடதாரிகளுக்கும் குழப்பவாதிகளுக்கும் இஸ்லாத்தில் என்றுமே இடம் இருந்ததில்லை. அவர்கள் அப்போதைக்கப்போது வடிகட்டப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மிராஜுக்கு சென்ற போது அதை நம்பாத சிறு கூட்டம் இஸ்லாத்தை விட்டு வெளியேறியது. நமது ஆலயத்தை நோக்கி தொழுதுவந்த முஹம்மது, இன்று கஃபாவை நோக்கி தொழ ஆரம்பித்து விட்டாரே! என கோபமுற்ற சிறு கூட்டம் கிப்லா மாற்றத்தின் போது வெளியேறியது. இவ்வாறு பலசமயங்களில் அல்லாஹ் வடிகட்டியுள்ளான். அதே நிலைமைதான் இன்று தவ்ஹீத் ஜமாஅத்திலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அற்ப காரணங்களுக்காக பிரிந்து சென்றவர்களும் மோசடி பேர்வழிகளும் எங்கே அடையாளம் தெரியாமல் போய்விடுவோமோ என அஞ்சி இன்று கொள்கையற்றவர்களுடனும் கப்ரு வணங்கிகளுடனும் கூட்டு சேர்ந்து வருகின்றனர். போலி ஒற்றுமைக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்று அவர்கள் கூறிவரும் வேளையில், எதற்காகவும் கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத், ரியாத் மண்டல செய்திகளையும் தலைமை செய்திகளையும் எடுத்துரைத்தார். மண்டல நிர்வாகிகள் சகோ. அக்பர் கனி மற்றும் அரசூர் பாரூக் முன்னிலை வகிக்க ஏராளமான சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் கிளை ஆலோசனைகளுடன் கூட்டம் நிறைவுற்றது.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.