அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாதில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் 11-11-2011


மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலமும் சஹ்ஹா சர்ஜிகல் சென்டரும் இணைந்து முதன் முறையாக கடந்த 11-11-11 அன்று இலவச மருத்துவ பரிசோதனை முகாமினை நடத்தியது.

ரியாத் மாநகரின் மையப் பகுதியான பத்தாவிலுள்ள சஹ்ஹா மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமில் இரத்தப் பரிசோதனைகளான இரத்த அழுத்தம், சுகர், கொலஸ்ட்ரால் அளவு மற்றும் கண் பரிசோதனை போன்றவை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாகவே செய்யப்பட்டன. ஆண்கள், பெண்கள் என சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இரத்தப் பரிசோதனை சான்று உடனே வழங்கப்பட்டது. சுமார் 40 நபர்களுக்கும் மேல் மருத்துவர் தாமஸ் மேத்யூ அவர்களால் கண் பரிசோதனை செய்து சான்று வழங்கப்பட்டுள்ளது. 

மாலை 3:30 மணிக்கு துவங்குவதாக இருந்த இம்முகாமிற்கு மக்கள் ஒருமணிநேரம் முன்பாகவே வருகை தந்ததால் 3.00 மணிக்கு துவங்கியது. இம்முகாமிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றதால் இரவு 9:30 மணி வரை பரிசோதனைகள் செய்யப்பட்டு மீதமுள்ளவர்கள் பின்னர் வரும்படி அறிவுறுத்தப்பட்டனர். முகாம் ஒருநாள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டாலும் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விடுபட்டவர்கள் வரும் வாரம் முழுவதும் எந்நேரத்திலும் மருத்துவமனைக்கு வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை ஒருங்கிணைப்பாளரான நஜீம் அவர்களின் முன்னிலையில் சிறப்புடன் செயல்பட்ட மருத்துவக் குழுவுடன் தமிழகத்தை சேர்ந்த டாக்டர்.கிருஷ்ணவேணி அவர்கள் சிறப்பான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் முதலாவது மருத்துவ முகாம் என்றாலும் முகாமிற்கான ஏற்பாடுகளை ரியாத் மண்டல மருத்துவ அணி செயலாளர் புதுக்கோட்டை ஃபாரூக் முன்னிலையில் நிர்வாகிகளும் தொண்டர் அணியினரும் சிறப்புடன் செய்திருந்தனர்.

















ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.