அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாதில் கர்ப்பிணி பெண்ணுக்கு அவசர இரத்த தான உதவி 31-10-2011


ரியாதில் பணி புரியும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சகோ. முஷாரத் தானி. இவர் தனது மனைவி ஃபாத்திமாவோடு ரியாதில் வசித்து வருகிறார். இவரது மனைவி, பிரசவத்திற்காக ரியாதிலுள்ள நஸீம் அல்-அஸ்ஹார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடனடியாக குழந்தை பிறப்புக்காக அறுவை சிகிச்சை செய்ய 4 யூனிட்கள் இரத்தம் தேவைப்பட்டதால், ரியாத் மண்டலத்தின் தன்னலமற்ற இரத்த தான சேவை குறித்து கேள்விப்பட்டு, தனது நண்பர் தமிழகத்தை சேர்ந்த ஷாஹுல் ஹமீத் மூலம் ரியாத் மண்டல தஃவா செயலாளர் சகோ. ஹாஜா மைதீனை அணுகினார். மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் அவர்களின் ஏற்பாட்டில், உடனடியாக, 31-10-2011 அன்று மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத், சித்தீன் கிளை செயலாளர் சகோ. அப்பாஸ் ஆகியோர் உடன் சுமைசி மருத்துவமனை இரத்த வங்கியில் அவசர இரத்த தானம் செய்தார்கள். மற்ற 2 யூனிட்கள் அவரின் உறவினர்கள் கொடுத்து உதவினர். 31-10-2011 அன்று இரவு 8 மணிக்கு ஆண் குழந்தை பிறந்ததாக மண்டலத்திற்கு தெரிவித்ததோடு, நமது சேவை பெரிதும் உதவியாக இருந்ததாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதோடு இரத்த தானம் செய்தவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் நெகிழ்ச்சியோடு கூறினார்.

கடந்த வாரம் நடைபெற்ற ரியாத் மண்டலத்தின் இரத்த தான முகாம்களில், தன்னார்வத் தொண்டர்களாக வாகனப் பணி செய்ததால் இரத்தம் கொடுக்க நேரம் இல்லாமல் போன நமது சகோதரர்களுக்கு, இந்த அவசர இரத்த தான உதவியின் மூலம் வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.