அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

‘இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் தினம்’ - பத்தாஹ் மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு 18-11-2011

ற்போது உலகமெங்கும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதை மையமாகக் கொண்டு 18-11-2011 வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல தலைமை அலுவலகத்தில் குழந்தைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மௌலவி. செய்யதலி ஃபைஸி அவர்கள் துவக்கி வைத்தார். 

‘இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் தினம்’ எனும் தலைப்பில் முஹம்மது மாஹீன் சிறப்புரையாற்றினார். குழந்தைகள் தினம் கொண்டாடுவதும் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவதும் ஒரு நாளோடு நின்றுவிடக் கூடாது. அது ஒவ்வொரு நாளும் தொடர வேண்டும். குழந்தைகளிடம் இரக்கம் காட்டாதவனும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் நம்மை சேர்ந்தவனல்ல! என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். நமது குழந்தைகளை இறையச்சம் கொண்டவர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும். ‘நல்ல குழந்தைகளை பெற நல்ல மனைவியை முதலில் தேர்ந்தெடு, உறவு கொள்ளும் போதே இறைவனிடம் பிரார்த்தனை செய்’ என்று இஸ்லாம் ஆரம்பத்திலேயே அடித்தளமிடுகிறது. 

குழந்தைகளை திட்டுவதும் காரணமின்றி அடிப்பதும் அவர்களை கவனிப்பதில் நேரம் ஒதுக்காமல் இருப்பதும் அவை பெற்றோரிடத்திலிருந்து விலகி செல்ல காரணமாகி விடுகின்றது. நம்முடைய அறிவுரைகளை விட நமது செயல்களைத்தான் குழந்தைகள் உற்று நோக்குகின்றன. எனவே நம்மை முதலில் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். டிவி, சினிமா, சீரியல் போன்றவை தான் குழந்தைகளின் முதல் எதிரி. அவற்றை நாமும் தவிர்த்துக் கொண்டு குழந்தைகளையும் அவற்றிலிருந்து விலகி இருக்க செய்ய வேண்டும். எனவே நாம் நமது குழந்தைகளிடத்தில் அன்பு செலுத்துவோம், இரக்கம் காட்டுவோம். தீய பழக்கங்களிலிருந்து நமது குழந்தைகளை விடுவிப்போம். நல்ல குழந்தைகளால் தான் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.  

அதைத் தொடர்ந்து ‘நாங்கள் தான் இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு நாளுக்கொரு இயக்கம் பொழுதுக்கொரு பெயர் என்று பன்முக பெயரில் இயங்கி மக்களிடம் உணர்ச்சிகளை தூண்டி அவர்களது வாழ்வை கேள்விக்குறியாக்கும் ஏபிசிடி எனும் அமைப்பிலிருந்து விலகி தவ்ஹீத் ஜமாஅத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யாசிர் என்ற சகோதரர், கொள்கையற்ற அந்த இயக்கத்தினரால் முஸ்லிம்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர், அதனால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் இழப்புகள் என்னென்ன என்பதை விலாவாரியாக விவரித்தார்.

இறுதியாக மண்டல செயலாளர் அரசூர் ஃபாரூக் மண்டல மற்றும் மாநில தலைமை செய்திகளை கூற கூட்டம் நிறைவுற்றது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்குபெற்றனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.