அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - ஷிஃபா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி 04-11-2011


TNTJ ரியாத் மண்டலம் ஷிஃபா கிளையின் உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 04.11.2011 வெள்ளியன்று ஷிஃபா செனைய்யா பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

மண்டல சமுதாயப்பணி ஒருங்கிணைப்பாளர் சகோ. மோமீன் தலைமை ஏற்று துவக்க உரையாற்றி, நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சகோ.ஹாஜா மைதீன் மண்டல தஃவா அணிச் செயலாளர், புதுகோட்டை சகோ.ஃபாரூக் மருத்துவ அணி செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மண்டலப் பேச்சாளர் சகோ. செய்யதலி ஃபைஜி அவர்கள், “முன் அறிவிப்பு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் நூருல் அமீன் மண்டல மாநில செயல்பாடுகளை விவரித்து, எதிர்வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள ரியாத் மண்டலத்தின் முதல் இலவச மருத்துவ முகாம் குறித்துப் பேசினார். 13 ஆவது இரத்த தான முகாமில், மிக அதிகமாக இரத்த தானம் செய்து முதலிடம் பெற்ற ஷிஃபா கிளைக்கு விருது வழங்கப்பட்டது. மதிய உணவுடன் நிறைவுற்ற இக்கூட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.