அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் - 04.11.2011

ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 04.11.2011 வெள்ளியன்று காலை 8.30 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார்.  மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி மவுலவி அவர்கள் மார்க்க விளக்க உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிர்வாக ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை நிகழ்ச்சிக்கு பொருத்தமாக அமைந்தது.

மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் செயல்பாடுகளை விளக்கினார். மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் கணக்கு விபரங்களை விளக்கினார்.  ரியாத் சார்பாக குர்ஆன் ஹதீஸ் அச்சிடப்பட்ட காலண்டர் 2012 விபரங்கள் குறித்தும், 11.11.11 அன்று நடைபெற உள்ள இலவச மருத்துவ முகாம் குறித்தும் விளக்கப்பட்டது.

அனைத்து அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப் பிறகு கூட்டம் துஆவுடன் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.