அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

‘தவ்ஹீத் ஜமாஅத்தினர் தள்ள வேண்டியதும் கொள்ள வேண்டியதும்’- நஸீம் கிளையில் பயான் 10-11-2011

டந்த 10-11-2011வியாழனன்று ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளையில் மாதாந்திர மார்க்க உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி இரவ 10.00 மணிக்கு நடைபெற்றது.

நஸீம் கிளை துணைதலைவர் சகோ.சாகுல் அவர்கள், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அடுத்ததாக மண்டல வர்த்தக அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன்  தவ்ஹீத் ஜமாஅத்தினர் தள்ள வேண்டியதும் கொள்ள வேண்டியதும்எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் இரண்டு இஸ்லாமிய இயக்கங்கள் தான் இருக்கின்றன, ஒன்று தவ்ஹீத் ஜமாஅத், இரண்டாவது அதை எதிர்க்கும் ஜமாஅத். இந்த இரண்டாவது ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் மக்களை நல்வழி படுத்த வேண்டும், கப்ரு வணக்கத்திலிருந்து தமிழக மக்களை விடுவித்து நரகிலிருந்து காக்க வேண்டும் என்பதற்காகவெல்லாம் ஒன்றுபடுவதில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு கூறுவதில் மட்டுமே ஒன்றுபடுகின்றனர். ஒவ்வொரு இயக்கத்திற்கும் வெவ்வேறு கொள்கைகள் இருக்கும் போது ஓரணியில் இருப்பதை போன்ற தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்துகின்றனர். ஆனால் கொள்கை அடிப்படையில் தனித்து விளங்கும்; ஒரே அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே! என்றும், தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பவர்கள் புறந்தள்ள வேண்டிய தீய பழக்க வழக்கங்களையும், எடுத்துக் கொள்ள வேண்டிய நற்பண்புகளையும பற்றி எடுத்துரைத்தார்.

இறுதியாக மறுநாள் (11-11-2011 அன்று) நடைபெற இருக்கும் இலவச மருத்துவ முகாம் பற்றி எடுத்துரைத்த மண்டல தாவா அணி செயலாளர் சகோ.ஹாஜா அவர்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக செய்திகளை விளக்கினார். மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. பாரூக் தலைமையில் கிளை முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளுடன் இரவு 11:30 மணிக்கு கூட்டம் துஆவுடன் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.