அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - "ஹஜ் நிலைநாட்டிய சமத்துவம்" - மலஸ் கிளை சிறப்பு சொற்பொழிவு 25-10-2011

ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையில் 25-10-2011 இரவு 8 மணியளவில் மாதாந்திர கிளைக்கூட்டம் மற்றும் உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ.முபாரக் அலி கூட்டத்தை துவக்கிவைத்தார். மண்டலப் பேச்சாளர் ஹபீழ் மவுலவி அவர்கள் 'ஹஜ் நிலைநாட்டிய சமத்துவம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

உலகில் மனிதர்களிடையே சமத்துவத்தை உருவாக்குவதில் தோல்வியுற்ற மதங்கள், மதங்களுக்கு மாற்றாக தோன்றிய கம்யுனிச, நாத்திக இன்னபிற சித்தாந்தங்களின் கொள்கைகளை மிக தெளிவாக விவரித்தார். அத்துடன் உலக மனிதர்கள் அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகள் என்று பிரகடனப்படுத்தி அதை செயல்படுத்தியும் காட்டிய இஸ்லாத்தின் கொள்கைகள் எவ்வாறு பிற மத கொள்கைகளிடமிருந்து வேறுபட்டு நிற்கிறது என்பதை வரலாற்று சான்றுகள் மூலமாக தெளிவாக எடுத்துரைத்தார். அவ்வாறு மனிதர்களிடைய நிறம், இனம், மொழி, தேசம், கலாச்சார பேதங்களை ஒழித்து இன்றளவும் சமத்துவத்தை ஹஜ் நிலைநாட்டி வருகிற விதத்தையும் விளக்கினார்.

அதைத்தொடர்ந்து மண்டலப் பொருளாளர் சகோ.பரீத் மண்டல மாநில செய்திகளை எடுத்துரைத்தார்.

அடுத்த கூட்டத்தில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.  மண்டல தஃவா அணி செயலாளர் சகோ.ஹாஜா முன்னிலை வகிக்க கிளைச் சகோதரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.  நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.