அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையில் ஹஜ் செய்முறை விளக்க தர்பியா 1-11-11

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் சார்பாக கடந்த 1.11.’11 செவ்வாயன்று "ஹஜ் செய்முறை விளக்கம்" நிகழ்ச்சி GGC பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

கிளைத் தலைவர் சகோ. நூர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஃபார்கோ கிளை தலைவர் சகோ. கமால், கதீம் செனைய்யா கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத், மண்டல தஃவா அணிச் செயலாளர் சகோ. ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

"புனித கஃபாவின் மாதிரி" சிறப்பாக செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும்,  ஹஜ் கிரியைகளின் முக்கிய நிகழ்வுகளான, அரஃபா பெருவெளி, 5 அடுக்கு பாலங்களில் மினாவில் கல்லெறிதல், கஃபத்துல்லாவை வலம் வருதல், புனித கிரியை நடக்கும் இடங்களின் மேப், மக்கள் போக்குவரத்து வழிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு, அதன் முக்கியத்துவங்கள் எளிமையாகவும், நடைமுறைக்கேற்றார் போலும் விளக்கப்பட்டன. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் தர்பியாவை நடத்தினார்.

நியூ செனைய்யா கிளை நிர்வாகிகள் சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.