அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இந்தியாவின் 64 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதில் இரத்த தான முகாம்

ரு மனிதன் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் பெருமையுடன் செய்யும் இழிநிலைக்கு இன்று மனிதன் தள்ளப்பட்டிருக்கின்றான். ஆடையின்றி திரிவதும், எதுவும் எதனுடனும் பாலுறவு வைத்துக் கொள்ளலாம் என்பதும் விலங்குகளின் கட்டமைப்பு. இன்றைய மனிதர்கள், குறிப்பாக நடிகர் நடிகையர், விலங்குகளை போல நடந்து வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். அதையே நாகரிகம், கருத்து சுதந்தரம், தனி நபர் சுதந்திரம், கலாச்சார முன்னேற்றம் என்றெல்லாம் சொல்லி அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். பணத்திற்காக தங்களது உடலை சுவர்களுக்கு பின்னால் விற்பவர்களை வேசி என்று சொல்லும் சமூகம், பகிரங்கமாக செய்யும் இந்த நடிக நடிகையரை உதாரண புரு(ஷி)ஷர்களாக, முன்மாதிரியாக கொள்கின்றனர். நாட்டில் நடைபெறும் முக்கிய பிரச்சனைகளுக்கு இந்த கூத்தாடிகள் சொல்லும் கருத்தை தலைமேல் வைத்து ஆடுகின்றனர். சுதந்தர தினம், குடியரசு தினம் போன்ற காலங்களில் இவர்களது பேட்டியை ஒளிபரப்புவதில் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போடுவதைக் காண முடியும். அந்த பேட்டியிலும் ‘நான் இந்த படத்தில் இவரோடு நடித்தேன், வர இருக்கும் இந்த படத்தில் ஐந்து முத்தக் காட்சிகளும் ஒரு குளியலறை காட்சியும் இருக்கின்றன; கதைக்கு தேவைப்படும்போது கிளாமர் தவறில்லை’ என்று தங்களை பற்றிய அருவறுக்கத்தக்க செயல்களை பெருமை பொங்க சொல்வதை காணலாம். இவர்களுக்கும் சுதந்தர தினத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அதை நடத்துபவர்களுக்கும் தெரியாது, பார்ப்பவர்களுக்கும் தெரியாது. தலைவர்களுக்கு மரியாதை, சிலைகளுக்கு மாலை அணிவித்தல், மணி மண்டபம் கட்டுதல் என்று இன்னொரு கூட்டம் சல்லிக்காசுக்கு உதவாத செயல்களை செய்து வருகின்றது.

ஆனால்,
‘ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து இஸ்லாத்திற்கு எதிரானது’.
‘பக்கத்து வீட்டுக்காரன் பசியோடிருக்க தான் மட்டும் உண்ணுபவன் உண்மையான இஸ்லாமியன் அல்ல!’
‘உனது வீட்டில் வைக்கும் குழம்பின் ஒரு பகுதியை உனது அண்டை வீட்டாருக்கும் கொடு’

என்று ஒருவன் பிறந்தது முதல் இறப்பது வரை பிறரை பேணி வாழ வேண்டும் என்று கட்டளையிடும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், ஜாதி, மத, இன, மொழி பேதம் பார்க்காமல் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதை பார்க்கலாம்.

ஏதோ ‘பிறந்தோம், வாழ்ந்தோம், மடிவோம்’ என்றில்லாமல் தாங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையான செயலுக்கும் மரணத்திற்கு பின்னர் உள்ள வாழ்வில் இறைவன் அதிகமாக பலன்களை தருவான் என நம்புவதால் தங்களது செயல்களை பயனுள்ளதாக அமைக்க முஸ்லிம்கள் விரும்புகின்றனர். சுதந்தரத்திற்காக போராடிய காலங்களில் முஸ்லிம்கள் தான் அதிகமான பங்களிப்பை செய்தார்கள் என்பதை எவரும் மறுக்க இயலாது. இன்றும் கூட பிற மதத்தினரை விட சிறுபான்மையினராக இருந்தாலும் தான தர்மங்கள் செய்வதில் அவர்களை விட இஸ்லாமியர்களே  அதிகமாக இருப்பதை காணலாம்.

சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்களின் அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதிகமாக இரத்ததானம் செய்ததில் தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக இருப்பதையே இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இரத்ததானம் போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. இந்திய குடியரசு தினத்தன்று தொலைக்காட்சியின் முன்பாக மக்கள் வீழ்ந்து கிடந்த போது முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக இரத்ததானம் செய்ததை பார்த்து வியப்படைந்தோர் பலர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் கடந்த 25ம் தேதியன்று (25.01.2013) கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடந்த இரத்ததான முகாமில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலை மோதியது. இஸ்லாமிய பெண்கள் அடக்கு முறைக்கு உள்ளானவர்கள் என்ற மீடியாக்களின் பொய்யுரைகளை தகர்த்தெறிந்தவாறு பெண்களும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்ய வந்ததை சொல்ல வார்த்தைகள் கிடையாது. இரத்தத்தை பிரித்தெடுக்க போதுமான உபகரணங்கள் இல்லை. எனவே 150 பேர் இரத்ததானம் செய்தால் போதும் என மருத்துவக்குழு குறிப்பிட்டதால் 149 பேருடன் முகாம் நிறைவுற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்த இந்த முகாமில் பிற மத சகோதரர்களும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்தர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் மட்டுமின்றி உயிர் காப்பதற்காக அவசர தேவைக்காகவும் டி.என்.டி.ஜேயின் ரியாத் மண்டலம் இரத்ததானம் செய்து வருகின்றது. ‘ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்ற திருக்குர்ஆன்  5:32 வசனத்திற்கேற்ப முஸ்லிம்கள் இரத்ததானம் செய்வதை போன்று ஒவ்வொருவரும் தானம் செய்ய முன்வந்தால் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படும் என்பது உறுதி.

தனிநபராக இருந்தாலும் அமைப்புகளாக இருந்தாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த அரும்பணிகளை பின்பற்றி தான தர்மங்கள் செய்யும் நாள் வெகுதொலைவில் இல்லை!

ஆக்கம்: மாஹீன், ரியாத்

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.