அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இயற்கை மரணத்தால் சவூதியில் இறந்த இளைஞர் நல்லடக்கம்

ரியாதின் பதியா பகுதியில் ஒரு சவூதியின் வீட்டில் ஓட்டுனராக பணி புரிந்தவர் சகோ. சபியுல்லாஹ். வயது 33. சொந்த ஊர் பட்டுக்கோட்டை. தற்போது நாகூரில் வசித்து வந்தவர். அவருக்கு மனைவியும், 6 மற்றும் 3 வயதுகளில் குழந்தைகளும் தாயகத்தில் உண்டு. அவர் வழக்கமாக தான் வேலை செய்து வரும் வீட்டில் உள்ள குழந்தைகளை காலை 6.00 மணிக்கு பள்ளிக்கு அழைத்துச் செல்லக்கூடியவர். இன்னும் அழைக்க வர வில்லையே என அவர் தங்கியிருந்த அறையில், அவரின் முதலாளி கடந்த 06.02.2013 அன்று காலையில் சென்று கதவை தட்டியும் திறக்காததால், பூட்டிய கதவை உடைத்து பார்க்கும் போது மரணித்த நிலையில் அவரைக் கண்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

உடன் இறந்தவரின் மூத்த சகோதரார் நியாஸ் அவர்களுக்கும் மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸுக்கும் போன் செய்து தகவல் சொல்லியுள்ளார். ரியாத் TNTJ வுக்கு இத்தகவல் கிடைத்தவுடன், உடன் அதன் பொறுப்பாளரான மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்களுக்கு உடனடியாக தகவல் தரப்பட்டு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

உடனடியாக, தாயகத்தில் நோட்டரி பப்ளிக் வக்கீலிடம் ஆவணங்களை தயார் செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மறுநாள் 07.02.2013 அன்று சவூதி அரசங்கத்திற்கும், இந்திய தூதரகத்திற்கும் தேவையான ஆவணங்கள் அவரின் மனைவியிடமிருந்து பெறப்பட்டு, அன்றே மரணித்தவரின் அண்ணனுடன் சகோ ஃபாரூக் அவர்களும் உடன் சென்று, அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்தார். இயற்கை மரணம் என்று மருத்துவமனை மற்றும் காவல் நிலைய ஒப்புதல்களும் பெறப்பட்ட நிலையில், கடந்த 08.02.2013 வெள்ளியன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு, ரியாதில் உள்ள உம்முல் ஹம்மாம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா தொழுகையில் ஷிஃபா கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே மூச்சுத் திணறல் நோய்க்காக மருத்துவம் செய்து வந்ததாக இறந்தவரின் அண்ணனும் உறுதி செய்தார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.