அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - அல்கர்ஜ் செனைய்யா கிளையில் மாதாந்திர பயான்


ரியாத் மண்டலத்தைச் சேர்ந்த, ரியாதிலிருந்து 100 கிமீ தொலைவிலுள்ள அல்கர்ஜ் செனைய்யா கிளையில் கடந்த 29-07-11 மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. பவுஞ்சிப்பட்டு நஸீர் தலைமையிலும், அல்கர்ஜ் சஹானா கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரியாத் மண்டல செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், நோன்பு ஏன்? எப்போது? எப்படி? எனும் தலைப்பில் உரையாற்றினார். ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் பற்றி அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதனால் அறியாத மக்களை தர்மம் செய்ய செய்ய வைத்து மார்க்க கடமையை நிறைவேற்ற செய்வதுடன் அந்த தர்மத்தின் மூலமாக ஏழைகளுக்கு உணவு வழங்கவும் இயலும். எனவே இரண்டு நன்மைகளை பெற்றுத்தரும் இந்த நற்செயலை அல் கர்ஜ் பகுதி மக்களிடத்தில் எவ்வாறு கொண்டு செல்வது என்பது பற்றி கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.