அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

துயரமான வாகன விபத்து: ரியாத் TNTJ மனித நேய உதவி & நல்லடக்கம்

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம், உயிர் காக்கும் இரத்த தான பணிகள் மட்டுமல்லாது, மனிதநேயப் பணிகள் பலவற்றைச் செய்து வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதும் ஒன்று.

சவூதி அரேபியாவில் வசிக்கக்கூடிய நமது முஸ்லிம் சகோதரர்கள் யாரேனும் இறந்து விட்டால், அவர்களின் ஜனாஸாவை இங்கு நல்லடக்கம் செய்வது அல்லது தாயகத்திற்கு அனுப்புவது என்பது இலகுவான பணி அல்ல. எனினும் நமது ஜமாஅத், அல்லாஹ்விற்காக இந்த பணியையும் சிரத்தையுடன் செய்து பல சகோதரர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த 19.08.2011 அன்று இராமநாதபுரம் மங்களக்குடியைச் சேர்ந்த முஹம்மது ஜின்னா என்ற சகோதரர் தம்மாமில் இருந்து ரியாத் வரும் வழியில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்து விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இச்செய்தி ரியாத் மண்டல நிர்வாகிகளுக்கு கிடைத்ததும் துரிதமாக, மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் மூலம், தாயகத்திலிருந்து நோட்டரி வக்கீல் மூலமாக இறந்தவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கும் சான்று வாங்கி அனுப்புங்கள் என்று குடும்பத்தினரிடம் ஆலோசனை சொல்லி, அந்த சான்று கிடைத்ததும் தாமதமின்றி கடந்த 23.08.2011 அன்று காலை இறந்தவரின் அண்ணன் மகன் அறந்தாங்கி சகோ. இப்ராஹீமை அழைத்து கொண்டு சவூதியில் சட்டபூர்வமாக செய்யவேண்டிய அனைத்து வேலைகளையும் ஒரே நாளிலேயே முடிக்கப்பட்டது கடந்த 25.08.2011 அன்று எக்ஸிட் 15 அல்ராஜி பள்ளியில் இஷாவுக்குப் பிறகு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, நஸீம் அடக்கத்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதில் மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மங்களக்குடி சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

விசாரித்ததில், வாகனத்தை தூக்க கலக்கத்தில் அவர் ஓட்டியதே விபத்தில் சிக்கி இறந்ததற்கு காரணம் என்கின்றனர். ஒரு கணநேரம் கண் அயர்ந்தவுடன் முதல் டிராக்கில் வந்துகொண்டிருந்த கார் அடுத்த டிராக்கில் வந்து கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரின் கார் மீது மோதி, அதற்கடுத்த டிராக்கில் வந்த சவூதியின் கார் மீது மோதி கீழே வீசப்பட்டு மரணம் அடைந்து விட்டார். அவரோடு அந்த காரில் பயணித்த பிற நாட்டு சகோதரர் ஒருவர் ஒரு சிறுகாயம் கூட இல்லாமல் அல்லாஹ்வின் உதவியால் பிழைத்துக் கொண்டார்.  விபத்தில் சிக்கிய சமயத்தில் அவர் சேப்டி பெல்ட் போட்டு இருந்திருந்தது உயிர் பிழைத்ததற்கு ஒரு காரணமாய் கூறப்படுகிறது. சகோ.ஜின்னாவின் மரணத்திற்கு காரணம் ஓய்வு எடுக்காமல் காரை ஓட்டியதும், சேப்டி பெல்ட் போடாமல் இருந்ததும் என தெரிய வந்துள்ளது.

குறிப்பு:
அன்பார்ந்த சகோதரர்களே! நமது கவனக்குறைவால் நமக்கு ஏற்படும் இழப்பையும், நம்மால் நமது குடும்பத்திற்கு ஏற்படும் இழப்பையும், சாலையை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பிறருக்கு ஏற்படும் இழப்பையும் கொஞ்சம் சிந்தியுங்கள். சாலை விதிகள் நமது பாதுகாப்பிற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. இனி நாம் சாலை விதிகளையும் வாகன விதிகளையும் பின்பற்றுவோம். அல்லாஹ் நாடினால், நன்மையே விளையும்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.