அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டலத்தில் தொடர் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சிகள்

மலான் மாதங்களில் சவூதி அரேபியாவில் வேலை நேரங்கள் அனைவருக்கும் வெவ்வேறாக அமைவதால், இஃப்தார் நேரத்தில் மட்டுமே மக்களை அதிகமாக ஒன்றிணைக்க முடியும். இஃப்தார் நேரத்தை பயனுள்ள விதத்தில் கழிக்கவும், ஃபித்ரா கடமை குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தவும்,  கிளை நிர்வாகிகள் - உறுப்பினர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாகவும், ரியாத் மண்டலம் தனது கிளைகளில் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு கிளையிலும், மாலை 5க்கு ஆரம்பித்து மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், கேள்வி/பதில் நிகழ்ச்சிகள், பரிசளிப்பு என மஃக்ரிப் தொழுகை (6.30 PM)  வரும் வரை சிறப்பாக நடைபெறுகின்றன.

இதன் முதல் கட்டமாக, ரியாத் டி.என்.டி.ஜே மர்கஸில் கடந்த 05.8.2011 வெள்ளியன்று ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள்  தலைமையிலும்மண்டல  நிர்வாகிகள்  முன்னிலையிலும்  நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  மண்டலப் பேச்சாளர் மவுலவி சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். ரமலானின் சிறப்புகள் என்ற தலைப்பில் மவுலவி அவர்கள் ஆற்றிய உரை சிறப்பாக அமைந்திருந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில், நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்பட்டன. ஃபித்ரா மற்றும் இதர மண்டல-மாநில செய்திகளை சகோ. ஃபெய்ஸல் விளக்கினார்.

இஃப்தார் ஏற்பாடுகளை ரியாத் மண்டலம் சார்பாக மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக்  மிகச்சிறப்பாக செய்திருந்தார். இறையமுதத்திற்குப் பின் மஃக்ரிப் பாங்கு சொன்ன பின், உணவமுதம் பரிமாறப்பட்டது. ரியாத் டி.என்.டி.ஜே. வின் பத்தா கிளையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது. அனைத்து கிளைகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.