அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ஹிஜ்ரி 1433 ஆஷூரா நோன்பு தேதி மாற்றம் அறிவிப்பு


ஹிஜ்ரி 1433 ஆஷூரா நோன்பு தேதி மாற்றப்பட்டு்ள்ளது
பிஸ்மில்லாஹ்
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977

ஆஷூரா நோன்பு
பி(ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும், கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?' என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அடுத்த ஆண்டு அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்' எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1916

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் கடைசி வருடத்தில் ஆஷூரா  நோன்பு நோற்குமாறு  கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் யூதர்களும், கிறித்தவர்களும் இந்த நாளை மகத்துவப்படுத்துகின்றனரே என்று கேட்ட போது, அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 9, 10  ஆகிய இரு நாட்களும் நோன்பு நோற்க போவதாகக் கூறியுள்ளார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசைப்பட்ட இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். முஹர்ரம் 9,10,11 ஆகிய மூன்று நாட்கள் நோற்க வேண்டும் என்பதோ, அல்லது முஹர்ரம் 10,11 ல் நோற்க வேண்டும் என்பதோ ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் மதிக்கின்ற பெரியார் மூஸா நபியாவார். இவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து இந்த நாளில் தான் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நாளில் தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டான். இந்த நோக்கத்திற்காகத் தான் இந்த நாளில் நோன்பு நோற்கப்படுகிறது என்பதை ஏராளமான ஹதீஸ்கள் விளக்குகின்றன. மூஸா நபி காப்பாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கத்தான் இந்த நோன்பினை நோற்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சவூதி அரேபியாவில் ஆஷூரா நாள் : 06. டிசம்பர்.2011  (முஹர்ரம் 10) செவ்வாய்
நோன்பு வைக்க வேண்டிய தினங்கள்: 05.12.2011 திங்கள் & 06.12.2011செவ்வாய் 
(1433 ஹிஜ்ரி வருட பிறப்பு -> நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை - முஹர்ரம் 1)

இறை திருப்தியை நாடி வெளியிடுவோர்:
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலம்
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.