அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - அவசர உதவியாக அரிய வகை இரத்தம் 2 யூனிட்டுகள் கொடை

ரியாதில் பணி புரிபவர் தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்து சகோதரி இராணி.  இவர் ஒரு சவூதியின் வீட்டில் வீட்டு வேலையாளாக (ஹவுஸ் மெயிடு) பணிபுரிந்து வருகின்றார். திடீரென அவருக்கு அடிபட்டு, ஒரு கிட்னியை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அவர் ரியாதிலுள்ள சுமைசி பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அரிய இரத்த வகையான O-ve இரத்தம் தேவைப்பட்டது.  இந்த வகை இரத்தம் மருத்துவமனையில் இல்லாததால், மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செய்ய மறுத்து, அவரை வெளியேற கூறிவிட்டது. அவரது கஃபீல் சவூதியும் உதவ மறுத்து விட்டார்.  இந்தியன் எம்பஸியிலிருந்தும் போதிய உதவி இல்லை. உதவிக்கு ஆள் இல்லாமல் அவர் தவித்த  நேரத்தில் ரியாத் தமிழ்ச் சங்கம் மற்றும் ரியாத் ஜெயலலிதா அம்மா பேரவை அமைப்புகள் மூலம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்திற்கு செய்தி கிடைத்தது.

மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. ஃபாரூக் உடனடியாக இரு O-ve இரத்த வகை உள்ள சகோதரர்களை ஏற்பாடு செய்ய, மண்டல தலைவர் சகோ. பெய்ஸல் அவர்கள், 30.11.2011 அன்று மாலை அவர்களை அழைத்து சென்று இரத்த தானம் செய்யப்பட்டது. கேரள சகோதரர் ஒருவரும், கடையநல்லூர் சகோதரர் ஒருவரும் இந்த குருதிக்கொடையை வழங்கினர். மேலதிகமாக  தேவைப்பட்டாலும் உடனடியாக ரியாத் மண்டலத்தை அணுகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.