ரியாத் சுமைசி பகுதிக்கு அருகில் உள்ள அரேபியன் கல்ஃப் கேம்பில் பிரச்சார நிகழ்ச்சியை ரியாத் மண்டலம் நடத்தியது. ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை நிர்வாகி சகோ. மதுரை முபாரக் அவர்களின் ஏற்பாட்டில், ரியாதில் உள்ள சுமைசிக்கு அருகில் உள்ள பகுதியில் கடந்த 28.12.2011 புதன் அன்று ஒரு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு இஷா தொழுகைக்கு பின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி மவுலவி அவர்கள், ‘மரண சிந்தனை’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அரேபியன் கல்ஃப் பொறுப்பாளர் சகோ. ஹஸன் காதர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு சகோ. சையது அலி மவுலவி அவர்கள் பதிலளித்தார். அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் “வருமுன் உரைத்த இஸ்லாம்” புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அரேபியன் கல்ப்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
"மரண சிந்தனை" - ரியாத் சுமைசி பகுதியில் பிரச்சாரம் & புத்தகங்கள் அன்பளிப்பு 28-12-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment