அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“உடற்பயிற்சி தர்பியா!" - ரியாத் – ஷிஃபா கிளை சிறப்பு நிகழ்ச்சி 02-12-2011

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளை சார்பாக உடற்பயிற்சி தர்பியா முகாம், கடந்த 02.12.2011 வெள்ளி அன்று மதியம் 1 மணி அளவில் ஷிஃபா செனைய்யா பகுதியில் நடைபெற்றது. நமது சகோதரர்கள் உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதிலும், சீரான சமச்சீர் உணவை உண்ணுவதிலும் போதிய கவனம் செலுத்தாததை கவனத்தில் கொண்டு இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜிம் டிரெய்னராக ரியாதில் பணிபுரியும் சகோ. துலா நவாஸ், குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களைக் கூறி, இம்முகாமை உடற்பயிற்சி செய்முறையோடு சிறப்பாக நடத்தினார். பலவிதமான உடற்பயிற்சி முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. தினந்தோறும் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சி முறைகள், நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு - உணவுப் பழக்க வழக்க முறைகள், உடல் எடையைக் குறைக்கும் முறைகள் முதலானவை செயல்முறையோடு விளக்கப்பட்டன.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1200 முதல் 1800 கலோரிகள் போதுமானதாக உள்ளது. ஆனால், இதையறியாமல் நாம் சுமார் 3000 கலோரிகளுக்கு மேல் தரக்கூடிய உணவுகளை தினமும் உண்கிறோம். இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என சகோ. நவாஸ் விளக்கினார். உடற்பயிற்சி நிலையத்திற்கு (ஜிம்) சென்றுதான் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதில்லை; மாறாக, வீட்டிலேயே செய்யலாம் என அவர் கூறினார்.

தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என ரியாத் மண்டல நிர்வாகிகள் தெரிவித்தனர். பெருமளவில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.