தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் ரப்வா கிளையில்
கடந்த 09-12-2011 வெள்ளிக்கிழமையன்று
மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. ஜும்ஆ தொழுகைக்கு முன்
நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிளை பொறுப்பாளர் சகோ.நஷீர் அவர்கள் துவக்கவுரையாற்றினார்.
அடுத்ததாக ‘நோயும் ஓர் அருட்கொடையே!’ எனும் தலைப்பில் மண்டல வர்த்தக அணிச்
செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன் உரையாற்றினார். வணக்க வழிபாடுகளில் நோயாளிகளுக்கு
அல்லாஹு தஆலா ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளான். நோயாளிகள் செய்யும் பிரார்த்தனைகளையும்
அவன் ஏற்றுக் கொள்கின்றான், நாம் செய்கின்ற தவறுகளுக்கு; இவ்வுலகிலேயே
நமக்கு நோய்கள் மற்றும் சோதனைகளை தந்து மறுமையில் தண்டனை தராமல்
கருணை காட்டுகின்றான் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அடுத்ததாக தமிழக
தலைமை செய்திகள் மற்றும் ரியாத் மண்டல செய்திகள் தெரிவிக்கப்பட்டதுடன்
சகோ.ஹாஜா முன்னிலையில் கிளை மேம்பாட்டிற்கான ஆலோசனைகளுடன் கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
ரப்வா கிளை
"நோயும் ஓர் அருட்கொடையே!" - ரப்வா கிளை மாதாந்தர நிகழ்ச்சி 09-12-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment