அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

'குழந்தைகளுக்கு பெற்றோரின் கடமைகள்’ - அஃப்லாஜ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 23-12-2011

ரியாதிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லைலா அஃப்லாஜ் என்ற ஊரில், அஃப்லாஜ் கிளை சார்பாக23-12-2011 அன்று மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. ஜும்ஆ தொழுகைக்கு பின் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய கிளைத் தலைவர் சகோ.சீனி முஹம்மது அவர்கள், வழக்கமாக அனைவரும் தத்தமது பணிகளை முடித்துக் கொண்டு வரும் நடுநிசி நேரத்தில் நடைபெறும் இக்கூட்டம் கடுங்குளிரின் காரணமாக பகலில் வைக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

அடுத்ததாக மண்டல வர்த்தக அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன் குழந்தைகளுக்கு பெற்றோரின் கடமைகள்எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். குழந்தையை ஸாலிஹான முறையில் வளர்ப்பதால் பெற்றோருக்கு கிடைக்கும் இம்மை, மறுமை பயன்கள் என்ன? குழந்தைகளுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன? தீய பழக்க வழக்கங்களிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது? என்பது பற்றி இஸ்லாம் கூறும் செயல்திட்டங்களை அவர் எடுத்துரைத்தார்.

பின்னர் இரத்ததானத்தில் நமது ஜமாஅத் தொடர்ந்து ஏழாவது முறையாக முதலிடத்தில் இருப்பதும் வெளிநாடுகளில் ரியாத் மண்டலம் முதலிடத்தில் இருப்பதும் பொதுக்குழுவில் அதிகமாக தஃவா பணி செய்ததற்காக ரியாத் மண்டலம் பெற்ற விருதுகளின் விபரங்களும் தெரிவிக்கப்பட்டன. மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் அவர்கள் தீன்குலப் பெண்மணி, ஏகத்துவம், உணர்வு போன்ற பத்திரிகைகளை தாயகத்திற்கு அனுப்புவதற்கான விபரங்களை எடுத்துரைத்த பின் மக்கள் ஆர்வத்துடன் ஆண்டு சந்தா வழங்கினர்.  மதிய உணவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.