அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பாபர் மஸ்ஜிதும் பத்திரிகைகளின் சூழ்ச்சியும்!" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 09-12-2011

ரியாதிலுள்ள டி.என்.டி.ஜே மர்கஸில் கடந்த 09-12-2011 வெள்ளிக்கிழமையன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஐ நினைவு கூறும் வண்ணம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பாபர் மஸ்ஜிதும் பத்திரிகைகளின் சூழ்ச்சியும்எனும் தலைப்பில் மண்டல வர்த்தக அணிச் செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் உரையாற்றினார். பாபர் மஸ்ஜித் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அது சமூக விரோதிகளால் இடிக்கப்பட்ட பிறகு பத்திரிகைகள் அதை பாபர் மஸ்ஜித் என்று குறிப்பிடாமல் சர்ச்சைக்குரிய பகுதி என்று குறிப்பிட்டன. பின்னர் ஆர்.எஸ்.எஸ் காரர்களால் அங்கே சிலைகள், தூண்கள் கொண்டு செல்லப்பட்ட பின் அயோத்தி கோயிலை தகர்க்க சதி என்று கூறின. இவ்வாறு திட்டமிட்டு பத்திரிகைகள் விஷத்தை தூவி வருகின்றன. டிசம்பர் 6 அன்று அந்த கோவிலை தகர்க்க சதி, இந்த ஊரை அழிக்க சதி என்று தொடர்ந்து எழுதி வருகின்றன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்என்பார்கள். ஆனால் தற்போது ஊர் இரண்டு பட்டால் பத்திரிகைகளுக்கு தான் கொண்டாட்டமாக இருக்கின்றது. எனவே பத்திரிகைகளின் இந்த சதியை முறியடித்து இடிக்கப்பட்ட பள்ளிவாசலை அதே இடத்தில் எழுப்ப இந்து சகோதரர்கள் உதவ வேண்டும். இந்து முஸ்லிம் சகோதரத்துவத்தை பிளக்க நினைப்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்ததாக இரத்ததானத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடத்தில் இருந்து வருவதையும் கடந்த வாரம் சென்னையில் நடந்த விழாவில் அது விருதுகள் கேடயங்களை வாங்கி குவித்த செய்தியும் தெரிவிக்கப்பட்டன. வெளிநாடுகளில்  செயல்பட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மண்டலங்களில் ரியாத் மண்டலம் முதலிடத்தில் இருந்து வருவதும் அக்கூட்டத்தில் நினைவுகூரப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.