ரியாத் மண்டலத்தின் தொடர் மொபைல் இரத்த தான முகாம்களின் தொடர்ச்சியாக, கடந்த 14.11.2011 திங்கள் கிழமை, ரியாதின் நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான கிரவுன் பிளாஸா ஹோட்டலில், அவசர மொபைல் இரத்த தான முகாம் நடைபெற்றது.அங்கு பணிபுரியும் ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை பொருளாளர் சகோ. ஜாக்கிர் அவர்களின் முயற்சியின் விளைவாக, நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் சகோ. ஹாதி அவர்களின் முழு ஒத்துழைப்புடன் இந்த முகாம் நடைபெற்றது.“ரியாத் இராணுவ மருத்துவமனை – Riyadh Military Hospital” சார்பாக, 7 மொபைல் இரத்த வங்கி வாகனங்களில் வந்து கலந்து கொண்ட இந்த முகாமில், 180 பேர்களுக்கு மேல் பதிவு செய்து கொண்டதில், 153 பேர் மட்டும் குருதிக்கொடை அளித்தனர். காலை 7 மணியிலிருந்து மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது. இம்முகாமில், இந்திய, இலங்கை, அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் இரத்த தானம் செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
இரத்த தானம்
சித்தீன் கிளை
தொடர் இரத்ததான முகாம்
ரியாத் சித்தீன் கிளை முயற்சியில் ஒரு நாள் மொபைல் இரத்த தான முகாம் 14-11-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment