சேலம் மாவட்டம் கோவிந்தபாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி என்ற சகோதரர் ரியாதில் பணி புரிந்து வந்தார். கடந்த 18.10.2012 அன்று மின்சாரம் தாக்கி அந்த சகோதரர் மரணித்து விட்டதாக வந்த தகவலை அடுத்து, மண்டல பொறுப்பாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள், இறந்து போனவரின் உறவினர் (தம்பி முறை) முஹம்மது யஹ்யாவை தொடர்பு கொண்டு, அடக்கம் செய்ய வேண்டியதற்கான ஆவணங்கள் தயாரிப்பு பற்றி ஆலோசனைகள் வழங்கினார். மேலும், கடந்த 21.10.2012 அன்று மருத்துவமனையில் "இறப்பு சான்றிதழ்" பெற்று, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, இந்திய தூதரகத்தில் தேவையான வேலைகளை முடித்துக் கொடுக்க உதவினார். அதனைத் தொடர்ந்து கடந்த 23.10.2012 அன்று அஸருக்குப் பின் அல்ராஜி பள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு, நஸீம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மனிதநேயம்
ரியாத் மண்டலம்
ஜனாஸா நல்லடக்கம்
சேலம் கோவிந்தபாளையம் சகோதரரின் ஜனாஸா ரியாதில் நல்லடக்கம்
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment