ரப்வா கிளையில் கடந்த 21-09-12 அன்று ஜூம்மா தொழுகைக்கு முன்னதாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ. காஜா அவர்கள் கிளை பணிகளை எடுத்துக் கூறினார். அதை தொடர்ந்து சகோ.முஹம்மது மாஹீன், ‘மாமனிதர் நபிகள் நாயகம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். விமர்சனத்திற்காக முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறை படிப்பவர்களும் அவரை பற்றி குறை எதுவும் கூற முடியாமல் இவரால் இத்தனை பரிசுத்தமாக, எளிமையாக, பொறுமையாக எவ்வாறு இருக்க முடிந்தது என்று ஆச்சரியப்பட்டு இவர் ஒரு இறைத்தூதர் தான் என்பதை ஏற்றுக்கொண்டு வருவதை ஆதாரங்களுடன் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் மாநில, மண்டல செய்திகள் குறிப்பிடப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment