கடந்த 07.09.2012 வெள்ளியன்று இரவு ரியாத் மண்டல மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், "அல்லாஹ்வை அஞ்சுவோம்" என்ற தலைப்பிலும், மண்டல பேச்சாளர் சகோ. உபையதுல்லாஹ் மவுலவி அவர்கள், "ஐம்பெருங்கடமைகள்" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, பேச்சாளர்களை உருவாக்கும் பொருட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் சித்தீன் கிளை செயலாளர் சகோ. அப்பாஸ் அவர்கள் "ஷவ்வாலின் சிறப்புகள்" என்ற தலைப்பில் பயிற்சிப் பேச்சாளர் வரிசையில் பேசினார். விநாடி வினா நிகழ்ச்சியும் நடைபெற்று புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல், மண்டல - மாநில செய்திகளை விளக்கினார்.
No comments:
Post a Comment