அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டலத்தில் இரத்த தான விழிப்புணர்வு பிரச்சாரம்

ரத்த தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல், துண்டு பிரசுரம் விநியோகித்தல், கேள்வி - பதில் நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்றவைகள் மூலம் ரியாத் மண்டலம் அனைத்து மொழி பேசுபவர்களிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக வருகின்ற 19ம் தேதி ஹஜ் பயணிகளுக்காக  மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற இருப்பதை பிரச்சாரம் செய்யும் வண்ணமாக ரியாத் மண்டலத்தின் அனைத்து கிளைகளிலும் போஸ்டர்கள் ஒட்டுதல், பல்வேறு மொழிகளில் துண்டு பிரசுரம் விநியோகித்தல் போன்றவை நடைபெற்று வருகின்றன. மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் அனைத்து மொழி பேசுபவர்களிடத்திலும் இரத்ததானத்தை பற்றிய தகவல்களை விளக்கி வருகின்றனர்.

09-10-12 அன்று சகோ.ஷேக் அப்துல் காதர், ஹாஜா, ஜாபிர், நவ்லக், அல்கர்ஜ் அன்சாரி ஆகியோரை கொண்ட குழு ஹாரா பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

10-10-12 அன்று கதீம் செனையா கிளை சார்பாக சகோ.ஷாக்கிர், அப்துல் மாலிக் ஆகியோரை கொண்ட குழு அமீர் சல்மான் ரோடு, பழைய அல்கர்ஜ் ரோடு  ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

10-10-12 அன்று கதீம் செனையா கிளை சார்பாக சகோ.நூர் முஹம்மது, சர்புதீன் ஆகியோர் கதீம் செனையா மற்றும் குபேரா பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

10-10-12 அன்று ஒலையா கிளை சார்பாக சகோ.அய்யூப், கதிரை காஜா, நவ்லக், முஹம்மது மாஹீன் ஆகியோர் ஒலையா பகுதிகளில் விழிப்பணர்வு பிரச்சாரம் செய்தனர்.

10-10-12 அன்று மண்டல நிர்வாகிகளான கதிரை காஜா, அப்துல் ரஹ்மான் நவ்லக், முஹம்மது மாஹீன் ஆகியோர் சுலைமானியா, ஒலையா, ஒரூபா, முர்ஸலாத் உட்பட ரியாதின் பல்வேறு பகுதிகளில் இரவு 1 மணி வரை போஸ்டர்கள் ஒட்டுதல், பிரசுரங்கள் விநியோகித்தல், விளக்கம் கொடுத்தல் போன்றவைகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

11-10-12 அன்று நியு செனையா கிளை சார்பாக சகோ.கமால், ஆசாத், அபுதாஹிர் மற்றும் முஹம்மது மாஹீன் ஆகியோரை கொண்ட குழு  பழைய அல்கர்ஜ் ரோடு, அஸீஸியா, நியு செனையா  ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.