அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"தஃவா பணியின் முக்கியத்துவம்" - பத்தாஹ் கிளையில் சொற்பொழிவு & தஃவா நிகழ்ச்சிகள்

ரியாத் மண்டலத்தின் பத்தாஹ் கிளை கூட்டம் கடந்த 21-09-2012 வெள்ளி அன்று காலை 10 மணிக்கு பத்தாஹ் மர்கஸில் நடைப்பெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. சையதலி ஃபைஜி அவர்கள் “தஃவா பணியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின்னர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் அவர்கள் மண்டல மற்றும் மாநில செய்திகளை விளக்கினார். இறுதியாக பத்தாஹ் கிளை செயலாளர் நெல்லை ஏர்வாடி சலாவுதின் அவர்கள் பத்தாஹ் கிளை செயல்பாடுகள் மற்றும் மேலும் அதன் செயல்பாடுகளை எப்படி விரிவுபடுத்துவது என்பதனை விளக்கினார்.  

முன்னதாக ஹஜ் செய்வோருக்கு வழிகாட்டியாகவும் ஹஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகளை அனைவரும் அறியும் பொருட்டும் "ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்" என்ற பிரசுரங்களை ரியாத் மாநகரின் மையப் பகுதியான பத்தாவில் கடைகள் தோறும் சென்று பத்தாஹ் கிளை சார்பாக விநியோகம் செய்யப்பட்டது.

மேலும், பிற மொழி பேசும் சகோதரர்களிடமும் தவ்ஹீத் கொள்கையை எடுத்தியம்பும் முகமாக, பத்தா கிளையில் மலையாளிகளிடம் அழைப்பு பணி செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு முஸ்லிம்-கிறித்துவ விவாதங்களை மையப்படுத்தியும், மலையாள புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்பணிகள் செப்டம்பர் மாதம் முழுவதும் நடைபெறுகின்றன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.