மார்க்க மற்றும் சமுதாயப்பணிகளோடு, உடல் ஆரோக்கியத்தையும் பேணிக்கொள்ளும் முகமாக, ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையில் உடற்பயிற்சி தர்பியா நடைபெற்றது. ஜிம் டிரெய்னர் சகோ. ரைய்யான் அவர்கள் உடற்பயிற்சி வகுப்பினையும், உடல் ஆரோக்கியத்திற்கான குறிப்புகளையும் தெளிவுபடுத்தினார். இத்தர்பியா நிகழ்ச்சி கடந்த 27.09.2012 வியாழன்று சித்தீன் பகுதியில் நடைபெற்றது.
மேலும், சித்தீன் கிளை சார்பாக, ஹாரா, சுலைமானியா மற்றும் சித்தீன் பகுதிகளில், "யார் இவர்?" என்ற துண்டுப்பிரசுரமும், உருது பேசும் மக்களிடையே தவ்ஹீத் பிரச்சாரத்தை எடுத்தியம்பும் முகமாக "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உருது" டிவிடிக்களும், நேபாள மொழியிலான தொழுகை விளக்கம் புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன. இப்பணி செப்டம்பர் முழுவதும் பல்வேறு தேதிகளில் நடைபெற்றது.
No comments:
Post a Comment