சித்தீன் கிளையில் கடந்த 18-09-12 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ.அப்பாஸ் அவர்கள், துவக்கவுரையாற்றினார். அடுத்ததாக மண்டலத்திலிருந்து சென்ற மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘உலகம் போற்றும் உத்தம நபி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறைதூதர் நபிகள் நாயகத்தை உலகமே வியந்து போற்ற காரணம் என்ன என்பதையும் அயோக்கியர்களால் அவதூறு பரப்பப்படும் போது அவரை அறிந்து கொள்ள அனைவரும் ஆர்வப்படுவதையும் அவர் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
அடுத்ததாக மண்டல தொண்டரணி செயலாளர் சகோ.நூர் அவர்கள், மண்டல மற்றும் மாநில செய்திகளை தெரிவித்தார்.
மேலும், சித்தீன் கிளை சார்பாக, பல்வேறு மொழிகளில் மார்க்க விளக்க புத்தகங்கள், உருது இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் டிவிடிக்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment