சித்தீன் கிளையின் ஏற்பாட்டில் மாதந்தோறும் ஹாரா பகுதியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. சகோதரர் ஷாகிர் அவர்களின் கேம்பில் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கடந்த மாதம் (24-09-12) அன்று மௌலவி செய்யதலி ஃபைஸி அவர்கள் ‘உத்தமரின் வரலாற்றை உலகம் திரும்பி பார்க்கும்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து சகோ.முஹம்மது மாஹீன், மண்டலம் நடத்தும் இரத்ததான முகாம் பற்றியும் மாநிலம் நடத்திய முற்றுகை போராட்டம் பற்றியும் எடுத்துரைத்தார்.
துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டது.
No comments:
Post a Comment